யாழில் இன்றுகாலை எரிந்து கருகிய பெண் !

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது வீட்டிலிருந்த 67 வயதுடைய குடும்பப் பெண் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir