எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் நடத்தும் கருத்துக்கணிப்புகளால் வாக்காளர்கள் செல்வாக்கு பெறவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.