சஜித்தின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது, இதில் சிறப்புக் கருத்துரையாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இதில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் நிகழ்வில் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்குத் திட்டம் குறித்து அங்கு தெளிவூட்டப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் Economic Blueprint பொருளாதாரத் திட்டம் மற்றும் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி கொள்கைப் பிரகடனம் என்பன இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

You May Also Like

About the Author: digital

Leave a Reply