ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுப் பிரதிநிதிகள் நேற்று (05) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை திருகோணமலையில் உள்ள தமிழரசுக் கட்சி மாவட்டப் பணிமனையில் சந்தித்தனர்.
குறித்த சந்திப்பின்போது, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைவரங்கள் பற்றியும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பற்றியும் கலந்துரையாடினர்.