14 இலட்சத்தை எட்டிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது.

ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குழு வந்துள்ளது.

கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,487,303 என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply