சீனாவின் நன்கொடையில் பாடசாலைகளுக்கான இலவச சீருடை விநியோகம்!

நாட்டின்  4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் மற்றும் 825 ‘பிரிவெனாக்களுக்கு’ தேவையான அனைத்து அங்கிகளையும் (சிவுறு) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை தவணைக்காக விநியோகிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை சீருடைகள் மற்றும் அங்கிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர், சீனத் தூதுவர் மற்றும் சீன அரசாங்கத்தின் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தினால் பாடசாலை சீருடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு நவம்பர் 13ஆம் திகதி முதல் சீருடைத் தொகையும், இரண்டாவது நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது சீருடை டிசம்பர் 20ஆம் திகதியும் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply