லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அவர் கையளித்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் முதித பீரிஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.

Muditha Peiris resigns as Chairman of Litro Gas Lanka

You May Also Like

About the Author: digital

Leave a Reply