2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு உள்நாட்டு எல்பி எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எல்.பி எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சன்ன குணவர்தன இன்று (ஒக்டோபர் 01) அறிவித்தல் விடுத்துள்ளார்.
பங்குகள் மற்றும் செயற்பாடுகளை முறையாக நிர்வகிப்பதன் காரணமாகவே இவ்வாறான நிவாரணங்களை வழங்க முடியும் என அரச நிறுவனமானது மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ எல்.பி எரிவாயு உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு மாற்றமின்றி இருக்கும்:
12.5 கிலோ – ரூ. 3,690
5 கிலோ – ரூ. 1,482
2.3 கிலோ – ரூ. 694