வர்த்தகர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரர் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் இளைய சகோதரர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்த ஓமான் வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களை நாசம் செய்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரர் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply