ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை வெளியாட்களுக்கு வழங்கியதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இதனையடுத்து விசாரணைகள் நிறைவடையும் வரை வினாத்தாள் திருத்தப்படமாட்டாது என்றும் எவரேனும் முறையற்ற வகையில் செயற்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாணவர்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கமாட்டோம் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply