எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் 2 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று (11) நண்பகல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.