அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பயண ஆலோசனை ஒன்றை வௌியிட்டுள்ள அமெரிக்க தூதரகம், சந்தேகப்படும்படியான எதைக் கண்டாலும் 119 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.