பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் நாளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படுவதால் தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத்தேர்தல் நிறைவடையும் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இம்முறை பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், 2,1160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 738,050 அரச உத்தியோகஸ்த்தர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்
தொடர்ந்து தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் புதன்கிழமை (30) நடைபெறவுள்ளது.
இதனையடுத்து நவம்பர் மாதம் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், இத்தினங்களில் வாக்களிக்காதவர்கள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.