திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளே பின்னடைவிற்கு காரணம்! டக்ளஸ் தேவானந்தா!

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட  அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன், கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈழ மக்கள் ஜனநாயக்க் கட்சியின்  அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது  என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம்  சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை  நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்,

இதேவேளை குறித்த கலந்துரையாடலில்  ஏனைய மவட்டங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதி நிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply