கொலன்னாவ லக்ஸந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு (21) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின்சார அமைப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும், தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததில் சிறு பிள்ளைகள் இருவர் உட்பட 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று (22) காலை வரை நீர் மற்றும் மின்சார விநியோகத்தை அதிகாரிகள் சீர் செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.