ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமைச்சுகளுக்கான இரண்டு புதிய செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.