நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதார்.
ஜா – எல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றதாக ஜா- எல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் குறித்த விற்பனை நிலையத்தில் பணிபுரியும் சக பணியாளருடன் ஒன்றாக இணைந்து மதுபானம் அருந்திய வேளையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போது, சந்தேக நபரான சக பணியாளர் உயிரிழந்தவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபரான சக பணியாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.