நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதாவது இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இந்தியாவிலிருந்து சம்பா மற்றும் வெள்ளை பச்சை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றும் (12), நாளையும் (13) கூடுதலான அரிசித் தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித பெரேரா கருத்து தெரிவிக்கும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.
அதாவது, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என தெரிவித்தார்.
