வடமாகாணத்தில் பரவும் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாள் காய்சல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும்.
