சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று (14 ) முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் ஒப்புதலில் வெளியிடப்பட்டுள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்தும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவையாவன,

சிவனொளிபாதமலை வளாகத்தில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்தல், பராமரித்தல், கட்டடங்கள் கட்டுதல், யாசகம் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வெளியேற்றுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

சிவனொளிபாதமலை வனப்பிரதேசத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் தீ பிடிக்கும் வகையில் செயற்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாத்திரைக் காலம் அடுத்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply