இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்!

சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியன இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு பணம் எதுவும் வழங்கப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளன.

எனினும் ஒலிம்பிக் புலமைப்பரிசிலுக்காக நேரடியாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்ந்துவழங்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவானது இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு அறிவித்துள்ளது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (13) நடைபெற்ற போது, தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்தவகையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பரிந்துரைகளை பெற்று தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரலுடன் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply