பாணந்துறையில் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு மீட்பு!

பாணந்துறையில் உள்ள வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்திலிருந்து 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பாணந்துறை – வடக்கு பாணந்துறை, கோரகபால பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரதேச மக்கள், பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணந்துறை வடக்கு பொலிசார், மலைப்பாம்பை பாதுகாப்பாகப் பிடித்து பொல்கொட வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply