முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவெல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 1,200 லீற்றர் (08 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
