இந்த வருடத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடத்தில் டிசம்பர் 14 வரையான காலப்பகுதியில் மாத்திரம் 12 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 77 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலேயே பெரும்பாலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.