பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவினால் இந்த நியமனம் இன்று (18) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.