நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் வழக்கு இன்று (20) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அதனையடுத்து, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்றின் பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.