முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கப்பலில் இலங்கை வந்தடைந்த மியன்மார் அகதிகளும், அவர்களை ஏற்றிச் சென்ற படகில் இருந்த பணியாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் 100 இற்கு மேற்பட்ட அகதிகளும், 12 பணியாளர்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மியன்மார் அகதிகளை கடந்த வியாழக்கிழமை படகுடன் மீட்ட கடற்படையினர், நேற்று (20) திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
