கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இன்று (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று முதல் இயங்கும் வழமையான பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
அதனடிப்படையில், புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட தூர பயணங்களுக்கு சுமார் ஐம்பது மேலதிக பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
