இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதாவது, நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் இயங்கை இடர்களால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000 ரூபாய் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 02ஆம் திகதி வரையில் கடந்த சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பில் விவசாய, காணி, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
