தம்பதியினர் மீது துப்பாக்கி சூடு- கணவன் உயிரிழப்பு!

இனந்தெரியாத நபர்களால் தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் 30 வயதுடைய பெண் எனவும், அவர்கள் அப்பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த திருமணமான தம்பதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவலோ இதுவரை வெளியாகவில்லை.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply