கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர், மாதம்பே தெமட்டபிட்டிய பிரதேசத்தில் வைத்து நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 22ஆம் திகதி மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமட்டபிட்டிய பிரதேசத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வாதப்பிரதிவாதத்தின் காரணமாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மணக்குளம காக்கப்பள்ளிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், அவரது மரணம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி, விசாரணையின் போது, குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கரவிடகராய பிரதேசத்தில் வசிக்கும் முறையே 53 மற்றும் 28 வயதுடைய தந்தை மற்றும் மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.