நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

அம்பாறை, திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் மூழ்கி நேற்றிரவு மூவர் காணாமற் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவரும் திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் மூழ்கி காணாமற் போயுள்ளனர்.

இந்தநிலையில், தற்போது 17 வயது சிறுவனின் சடலம் மாத்திரம் கரையொதுங்கியுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஒரு சிறுவனின் சடலம் மாத்திரம் கரையொதுங்கியுள்ள நிலையில் கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹிக்கடுவையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

57 வயதான இந்தியர் என அடையாளம் காணப்பட்ட நபர், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply