டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பிரான்ஸில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த மேற்படி பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பின்படி மருத்துவக் குழுக்கள் உதவி வழங்க வந்த போதும் குறித்த பெண் விமானத்திலேயே உயிரிழந்து விட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான செய்தியை, பிரெஞ்சு குடிமகனான குறித்த பெண்ணின் மகனுக்கு இலங்கைத் தூதரகம் தொடர்பு கொண்டு அறிவித்துள்ளது.
மேலும் தாயாரின் உடலை பாரிஸுக்கு கொண்டு செல்ல உதவுமாறு மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடலை பிரான்ஸ்க்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
