2025 புத்தாண்டு நேற்று நள்ளிரவில் உதயமானது!

உலகின் முதலாவது புத்தாண்டை பசுபிக் தீவு நாடுகளில் உள்ள மக்கள் கோலாகலமாக வரவேற்றனர்.

உலகின் முதல் நாடாக பசுபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி எனும் கிறிஸ்துமஸ் தீவில் புத்தாண்டு பிறந்தது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் கிரிபாட்டி தீவில் புத்தாண்டு உதயமானது.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் புத்தாண்டு மலர்ந்தது.

அதன் பின்னர் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் புத்தாண்டு உதயமானது.

2025 புத்தாண்டு பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் பிரமாண்டமான நிகழ்வுகளோடு இணைந்து வரவேற்கப்பட்டது.

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நேற்றிரவு (31) காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளிலும் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.

நாட்டின் பல இடங்களில் வான வேடிக்கை உள்ளிட்ட பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

2025 புத்தாண்டை முன்னிட்டு பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டத்தையும், வீதி போக்குவரத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலர்ந்துள்ள 2025 புத்தாண்டு அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டாக அமைய எமது “கலைக்கதிர்” செய்திப்பிரிவு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply