முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் கேள்வி எழுப்பவுள்ள எதிர்க்கட்சி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வி தகமை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அவர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் பதவி விலகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அவர் பெற்றுக்கொண்ட சான்றிதழை இன்னமும் சமர்ப்பிக்காத காரணத்தால் இதுகுறித்து எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்ப தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட பொறியியல் பட்டம் தொடர்பிலான சான்றிதழை சமர்ப்பிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும் இன்னமும் அதனை சமர்ப்பிக்காமையால் அதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்ப உள்ளதாக அறிய முடிகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply