நேற்று (05) இரவு, மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த ரயிலானது, ரயில் முனையத்திற்கு சென்ற போது தடம்புரண்டது.
ரயில் தடம் புரண்டதையடுத்து, கடலோர ரயில் போக்குவரத்தின் ஒரு ரயில் மருங்கு முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
தடம் புரண்ட ரயிலை ரயில்வே ஊழியர்கள் மீள் தடமேற்றியுள்ள போதும், இன்று காலை வரை ஒரு மருங்கின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால், தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் ஒரு மருங்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
