நேற்றிரவு (05) புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, ராஜாங்கனை, அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, முச்சக்கரவண்டியானது திடீரென பாதையில் கடந்து சென்ற நாயுடன் மோதுவதை தவிர்க்க முற்பட்ட வேளை, வீதியில் கவிழ்ந்து வீழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும், பின் இருக்கையில் பயணித்த சிறுவனும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிறுவன் உயிரிழந்ததோடு, சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.
சிலாபம் – வெலிஹேன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
