உள்நாட்டு சந்தையில் நாட்டு அரிசி மற்றும் பச்சரிசி பற்றாக்குறை ஏற்பட்ட சூழலில், இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி அரசாங்கம் சிறப்பு அனுமதியை வழங்கியிருந்தது.
அதன்படி, அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் நிலவரப்படி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 149,000 மெட்ரிக் தொன்கள் ஆகும்.
இதில் 55,000 மெட்ரிக் தொன் பச்சரிசி மற்றும் 94,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை உள்ளடங்குகின்றன.
இதற்கிடையில், இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு அரிசி தொகுதி நாட்டிற்கு வர உள்ள நிலையில், குறித்த அரிசி தொகுதியை விடுவிக்க சிறப்பு அனுமதி தேவை என்று சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருகோட தெரிவித்தார்.
