இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க தீர்மானம்!

புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட இருப்பதோடு, இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியதோடு, டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply