நேற்று (13) முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காவில – சோமாவதிய வீதியில், சோமாவதிய விகாரைக்கு அருகிலுள்ள திக்கல பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் வரையிலான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சோமாவதி விகாரைக்கு வழிபாடுகளுக்காக வந்தவர்களை, அவர்கள் பயணித்த பஸ்களின் ஊடாக வெலிகந்தை ஊடாக வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
