கையடக்க தொலைபேசிகளுக்கான டேட்டா பக்கேஜ்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் இந்திரஜித் ஹடபங்கொட தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொலைபேசி பக்கேஜ்களின் விலையையும் அதிகரிக்க எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய அவர், வாடிக்கையாளர் ஒருவர் தான் செயல்படுத்திய தொலைபேசி பக்கேஜ்களின் விலையில் அதிகரிப்பை எதிர்கொண்டால், அது தொடர்பான ஆதாரங்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
