முன்னாள் ஜனாதிபதிகள் மூன்று பேர் மாத்திரமே அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துகின்றனர்- ஜனாதிபதி தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிக்காலம் முடிவடைந்ததும் தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தாமல், தனது சொந்த வீட்டிற்கு சென்றதற்காக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.

பிரதான ஊடகமொன்றின் அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் தற்போது மூன்று பேர், குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மாத்திரமே அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைத்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனக்கு உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply