ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுந்தரபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தாக்குதல் சம்பவமாக மாறியதைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையைச் செய்த 30 வயதுடைய சந்தேக நபர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.