அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 10 இலட்சம் அபராதம்!

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகாரசபையால் பல சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கம்பஹா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் உள்நாட்டு வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று 255 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய உண்மைகளின்படி, குறித்த பல்பொருள் அங்காடிக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேற்று (27) மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

கடந்த தினங்களில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிரான வழக்குகளுக்காக நீதிமன்றம் 3 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதித்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது.

மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையானது அண்மைய தினங்களில் 140 சுற்றிவளைப்புகளுக்கு மேல் மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களிலும் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply