முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை, எதிர்கால அரசியல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இன்று (28) நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளதுடன், அலுவலக திறப்பு விழா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.