யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் இயேசுவின் சிலுவையில் இருந்து இன்று(28) நீர் கசிந்த சம்பவம் பிரதேசவாசிகளை ஆச்சர்யத்துக்குள்ளாகியிருக்கின்றது.
இயேசுவின் விரல் பகுதியில் இருந்து சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் கசிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிசார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதோடு மட்டுமன்றி இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றதுடன், புகைப்படங்களையும் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.