2025 ஜனவரியில் திருத்தப்பட்ட மின்சார கட்டணத்தில், எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் ஏற்படுத்தியமையால், முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பணவீக்கம் நேர்மறையாக மாறக்கூடும் எனவும், நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கை நோக்கிச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.