முல்லேரியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி நேற்று (28) முல்லேரியா பொலிஸ் பிரிவின், உடமுல்ல பகுதியில் உள்ள வீட்டொன்றில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​2 கிலோகிராம் 218 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 667,000 ரூபாய் பணம், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் ஆகியவற்றுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

முல்லேரியாவையைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply