இந்திய மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தமை தொடர்பில் கடற்படையினர் விளக்கம்!

காங்கேசன்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்தமையால், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இது குறித்து கடற்படை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி இயங்கியதாலே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக இன்று (29) உறுதிப்படுத்தியது.

சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்ததாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply