யாழ் வருகை தரவுள்ள ஜனாதிபதி!

எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி யாழ் வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (29) மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் (30) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply